பல இளைஞர்கள் ஒரே ஒரு ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நன்கு கவனித்திருப்பீர்கள், அது புரோட்டீன் ஆகும். தசைகள் கட்டமைப்புக்கு, பராமரிப்புக்கு புரதம் அவசியம். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். புரதங்களினால் பல்வேறு பயன்கள இருந்தாலும் அதை அளவாக எடுத்துக்கொள்ளாவிட்டால் தீங்கு விளைவிக்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை அறிந்துகொள்வதற்கு MES கல்லூரியின் விசிட்டிங் பேராசிரியரும் டயட்டீஷியனுமான வந்தனா ககோட்கரை அணுகினோம்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப புரோட்டீன்கள் அவர்களுக்குத் தேவைப்படும். ஒரு கிலோ எடைக்கு 0.8 முதல் 1 கிராம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, 50 கிலோ எடையுள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 40-50 கிராம் புரதங்கள் தேவைப்படுகின்றன.
அவற்றை 2-3 கட்டோரிஸ் பருப்பு வகைகள், 1 ஆர் 2 கிளாஸ் பால் பொருள்கள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் கொண்டு வர முடியும். மீதமுள்ளவை தானியங்களிலிருந்து (அரிசி, ஜோவர், கோதுமை போன்றவை) பெறலாம். ஒருவேளை அசைவ பிரியராக இருந்தால், 2 -3 மீன் துண்டுகள் அல்லது பெரிய சிக்கன் பிஸ் அல்லது 2 முட்டைகளில் பெறலாம். மீதமுள்ளவை அரிசி அல்லது சப்பாத்தி போன்ற தானியங்கள் மூலம் சாப்பிட்டு சரிசெய்துவிடலாம்.
உடலில் புரதத்தின் முக்கியத்துவம்:
புரதங்கள்தான் உடலை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்தாக கருதப்படுகின்றன. தோல், தசைகள், உறுப்புகள், சுரப்பிகளுக்கு கட்டமைப்பு அடிப்படையை புரதங்கள் வழங்குகின்றன. பித்தம், சிறுநீர் தவிர அனைத்து உடல் திரவங்களிலும் பெரும்பாலும் காணப்படுகின்றன.
செயலிழந்த செல்கள், திசுக்களைச் சரிசெய்யவும் மாற்றவும் தேவைப்படுகின்றன. இதுமட்டுமின்றி, ரத்தத்தின் pHஐ பராமரிக்கவும், ரத்தம், தோல், முடி, நகங்கள், தசைகள், உறுப்புகள் உருவாவதற்கான செயல்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புரதம் இயற்கையாக பெறும் வழிமுறைகள்:
பால், பால் பொருள்கள், முட்டை, மீன், கோழி, இறைச்சி போன்ற விலங்குகளின் மூலங்களிலிருந்து வரும் புரதங்களில் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், அவை முழுமையான புரதங்கள் அல்லது ஹை பயோலாஜிக்கல் மதிப்பு புரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், கொட்டைகள், பருப்பு வகைகள், சோயா பீன், பருப்பு, காளான்கள் போன்ற காய்கறி மூலங்களிலிருந்து கிடைக்கும் புரதங்களில் தேவையற்ற அமினோ அமிலங்கள் உள்ளதால், அவற்றை முழுமையற்ற புரதங்கள் அல்லது குறைந்த பயோலாஜிக்கல் மதிப்பு புரதங்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், 2 அல்லது அதற்கு மேற்பட்ட முழுமையற்ற புரதங்களை ஒன்றாகச் சாப்பிடும்போது, அவை ஒன்றுக்கு ஒன்று பூர்த்திசெய்து, அத்தியாவசியமான அமினோ அமிலத்தை வழங்குகிறது. விலங்கிலிருந்து வரும் புரதங்களுடன் ஒப்பிடுகையில், சைவ மூலம் கிடைக்கும் புரதங்களில் கொழுப்புகள் குறைவாக உள்ளன, கொலஸ்ட்ரால் இல்லை, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் நன்மைகள் சேர்த்துள்ளன.
எனவே சப்பாத்தி அல்லது அரிசியுடன் 1 வாடி பருப்பு, 1 வாடி பருப்பு வகைகள் (பீன்ஸ், பட்டாணி, ராஜ்மா, மூங்) இருப்பது நிச்சயமாக மதிய உணவு அல்லது இரவு உணவிற்கான புரதத் தேவையை பூர்த்திசெய்யும். அதே சமயம், உடலில் விலங்கு புரதங்களுடன் அதிகளவில் ஓவர்லோடு செய்யாதீர்கள். காய்கறி புரதங்களை காட்டிலும் விலங்கு புரதங்கள் வித்தியாசமானவை. தேவைப்பட்டால் வாரத்தில் இரண்டையும் தனித்தனியாக முயற்சி செய்தாலும் பயனளிக்கும்.