அமெரிக்க - இந்திய கூட்டுறவு மன்றத்தின் US-India Strategic Partnership Forum (USISPF) இரண்டாவது வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் அமெரிக்காவின் முன்னாள் செயலர் காண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மத சிறுபான்மையினரை பாதுகாப்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும் இது தொடர்கிறது. மதத்திற்காக மக்கள் ஒருவர் பின்னால் செல்லும் போது, அதைவிட ஆபத்தானது ஒன்றுமில்லை.
பழைமைவாதம், தேசியவாதம் என்ற போலிப் பேச்சுகள் சர்வாதிகார தலைவர்களை எழுச்சி காண வைக்கும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை என்பது மக்கள் குரல் வழியாக ஒலிக்கும் கொள்கை மாற்றம். ஆனால் சர்வாதிகாரம் அப்படியல்ல, அது விரைவாக ஒரு கொள்கையை உருவாக்க முடியும். அது மேற்பார்வை இல்லாத மோசமான கொள்கையாகக் கூட இருக்கலாம்.
பொருளாதார வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைகள், விரைந்து செயலாற்றும் நடைமுறைகள் உருவாக வேண்டும் என தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும் அவர், ஒரு கட்டத்தில் சாலைகளில் நடக்க முடியாத நிலை கூட ஏற்படலாம் என தலைவர்களை கடுமையாக சாடினார்.
பொருளாதாரம், பழைமைவாதம் குறித்து பேசும்போது, ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான ரஷ்யா, சீனா குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
நரேந்திர மோடி- ட்ரம்ப் இடையேயான ஒப்பந்தம் ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார்.
இந்தாண்டு ஜூன் மாதம், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆப்பிள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்: தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ளும் குழந்தைகள்!