ETV Bharat / bharat

யு.பி.எஸ்.சி. தலைவராக பிரதீப் குமார் ஜோஷி நியமனம்

டெல்லி: யு.பி.எஸ்.சி. அமைப்பின் புதிய தலைவராக பிரதீப் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

UPSC
UPSC
author img

By

Published : Aug 7, 2020, 4:23 PM IST

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) புதிய தலைவராக பிரதீப் குமார் ஜோஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராகப் பதவி வகித்த அரவிந்த் சக்ஸேனாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், புதியத் தலைவராக ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பிரதீப் குமார் ஜோஷி பணியாற்றியுள்ளார். தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதால் யு.பி.எஸ்.சி அமைப்பின் உறுப்பினர் பதவி ஒன்று காலியாகவுள்ளது.

பீம் சயின் பஸ்ஸி, ஏஸ் போன்ஸ்லே, சுஜாதா மேத்தா, மனோஜ் சோனி, ஸ்மிதா நாகராஜ், சத்யவதி பரத் பூஷன் வியாஸ், டிசிஏ ஆனந்த், ராஜீவ் நயன் சௌபே உள்ளிட்டோர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக தற்போது உள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. முதல் நிலை, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: இந்தோ - சீனா எல்லையான அஸ்ஸாமில் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்த நரவனே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.