ETV Bharat / bharat

அவதிக்குள்ளாகும் பிரதமர் தொகுதி நெசவாளர்கள்: குரல் கொடுக்கும் பிரியங்கா காந்தி - பிரதமர் தொகுதி நெசவாளர்கள்

டெல்லி: ஊரடங்கின் காரணமாக அவதிக்குள்ளாகியுள்ள பிரதமர் மோடி தொகுதியின் நெசவாளர்களுக்கு உதவி தொகை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
author img

By

Published : Jul 1, 2020, 7:01 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவி தொகை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேச முதலமைச்சர் பிரதமர் மோடியை அழைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அதன்மூலம், லட்சக்கணக்கான சிறு குறு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியின் பெருமையான நெசவாளர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

தன்னுடைய அணிகலன்கள், வீடுகளை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கின்போது, அவர்களின் பணி முடங்கியது. சிறு வணிகர்கள், கைவினை கலைஞர்களின் நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சூழலில் உதவி தொகை மட்டுமே அவர்களுக்கு பேருதவியாக அமையும். பிரதமரின் பரப்புரை அல்ல" என்றார்.

ஜூன் 26ஆம் தேதி, ஆத்ம நிர்பார் உத்தரப் பிரதேசம் ரோஜ்கர் அபியான் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 1.25 கோடி வெளிமாநில தொழிலாளர்கள் பயனடையவுள்ளதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவர்கள், பட்டய கணக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.