ETV Bharat / bharat

'எனது தந்தை எனக்குக் கொடுத்த பரிசு' - கடைசி புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா காந்தி - Priyanka Gandhi last picture with Rajiv Gandhi

டெல்லி: தனது தந்தையின் 29ஆவது நினைவுதினத்தில் பிரியங்கா காந்தி, அவருடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படத்தைப் பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளார்.

Priyanka Gandhi tweets
Priyanka Gandhi tweets
author img

By

Published : May 21, 2020, 11:03 PM IST

Updated : May 22, 2020, 10:04 AM IST

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரின் 29ஆவது நினைவுநாள். இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அனுசரித்துவருகின்றனர். இந்நிலையில், அவரது மகளும், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படத்தைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், ''உங்களிடம் அன்பு காட்டதவர்களிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு உங்கள் வாழ்க்கை மாறும். உங்கள் வாழ்க்கையில் புயல் அடித்தாலும், உங்கள் வானம் இருண்டாலும் மன உறுதியுடன் நடைபோடுங்கள்.

  • To be kind to those who are unkind to you; to know that life is fair, no matter how unfair you imagine it to be; to keep walking, no matter how dark the skies or fearsome the storm; .. 1/2 pic.twitter.com/pQpwFfTqIE

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எவ்வளவு பெரிய துக்கமாக இருந்தாலும், வலுவான இதயத்துடன் தாங்கி கொண்டு, அதனை அன்பால் நிரப்ப வேண்டும். இவையனைத்தும் எனது தந்தை எனக்குக் கொடுத்த பரிசு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், தனது தந்தை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "1991ஆம் ஆண்டு இதே நாளில் என் அன்புக்குரிய தந்தை அவருடைய உயிரைத் தியாகம் செய்த நாள். அமைதி, கனிவு, இரக்கம், மென்மை என அனைத்தும் கலந்த அற்புதமான தந்தை அவர்.

  • In memory of my beloved father, Shri Rajiv Gandhi, who was martyred this day in 1991. He was a wonderful father; gentle, kind, compassionate & patient. I miss him. But he will always stay alive in my heart & in the wonderful memories I have of him. #RememberingRajivGandhi pic.twitter.com/bFO8CZoExN

    — Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரை இழந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். இருப்பினும், அவர் நீங்கா நினைவுடன் என்னுடைய இதயத்தில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்" என உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்

Last Updated : May 22, 2020, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.