ETV Bharat / bharat

விகாஸ் துபே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிரியங்கா காந்தி வலியுறுத்தல்! - விகாஸ் துபே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: விகாஸ் துபே வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) ஒப்படைக்க வேண்டும் என, பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தியுள்ளார்.

விகாஸ் துபே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

author img

By

Published : Jul 9, 2020, 7:55 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் முக்கிய ரெளடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்ய சென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் இரண்டு ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். துபேவை கைது செய்ய காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இதனிடையே இன்று (ஜூலை.9) விகாஸ் துபே மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள உ.பி., காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, “கான்பூரில் நடந்த ரவுடியின் கொடூரத் தாக்குதலை உ.பி., அரசு கையாண்டதில் தோல்வியுற்றுள்ளது.

பலத்த பாதுகாப்பு போடப்பட்டும் விகாஸ் துபே மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனிற்கு சென்றுள்ளார். விகாஸ் துபேயின் பெயர் இதுவரை ரவுடிகள் லிஸ்ட்டில் இல்லை. இதில் காவல் துறை அதிகாரிகளுக்கு பங்குள்ளது.

ஆகையால், இவ்வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்" என்று அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க...ராஜஸ்தானில் எட்டு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.