உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவல் நாளுக்கு நாள் டெல்லியில் அதிகரித்து வருகிறது. இதுவரை டெல்லியில் கரோனா வைரஸால் 22 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 837 பேர் உயிரிழந்தும் உள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து மக்களிடையே கோவிட்-19 பரவல் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஜூலை மாதம் இறுதிக்குள் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடக்கும் என அரசின் மதிப்பீடுகள் கணித்துள்ளன.
டெல்லி முழுவதும் உள்ள 22 மருத்துவமனைகளில் கோவிட்-19 சிறப்பு மருத்துவமனைகளில் கூடுதலாக 20 விழுக்காடு படுக்கைகளை அதிகரிக்க வேண்டுமென நகராட்சி உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவையடுத்து, டெல்லி ஷாலிமார் பாக், வசந்த் குஞ்ச் மற்றும் ஓக்லா ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஃபோர்டிஸ் குழுமத்தின் மூன்று மருத்துவமனைகளின் சார்பாக மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க கால அவகாசம் கோரியுள்ளதாக அப்பல்லோ இந்திரபிரஸ்தா மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற மாநிலங்களிலிருந்து சிகிச்சைக்காக மக்கள் நகரத்திற்கு வரத் தொடங்கி உள்ளதால் ஜூலை 31ஆம் தேதிக்குள் டெல்லிக்கு 1.5 லட்சம் படுக்கைகள் தேவைப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் தெரிவித்திருந்தார்.
டெல்லி நகரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தமாக 9,647 பிரத்யேக கோவிட் -19 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 8,402 படுக்கைகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.