காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகை செய்யும் மசோதா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் மாநிலங்களவையில் கடந்த திங்கள் அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இம்மசோதா குடியரசு தலைவரின் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று குடியரசு தலைவர் அம்மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.