இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதைத்தொடர்ந்து இருவரும் சபர்மதி நதிக்கரையிலுள்ள சபர்மதி ஆசிரமத்தை இருவரும் சுற்றிப்பார்த்தனர். அங்கிருந்த காந்தியின் ராட்டையைப் பார்தது வியந்த ட்ரம்பிடம், ராட்டையின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி எடுத்துக்கூறினார். அதிபர் ட்ரம்ப் அந்த ராட்டையில் நூல் நூற்றார்.
அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதில், "என் இனிய பிரதமர் மோடிக்கு, அருமையான வரவேற்பு அளித்ததற்கு நன்றி" என்று ட்ரம்ப் எழுதி கையெழுத்திட்டார்.
சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தை திறந்துவைக்க இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: ஐசனாவர் முதல் ட்ரம்ப் வரை - இந்தியாவுக்கு விசிட் அடித்த அமெரிக்க அதிபர்கள்!