ETV Bharat / bharat

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யூனிசெஃப் தகவல்

author img

By

Published : May 8, 2020, 3:38 PM IST

இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

Pregnant
Pregnant

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஒன்பது மாதங்களில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு அதிகரிக்கும் என யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

இது குறித்து யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அடுத்த ஒன்பது மாதங்களில் உலகம் முழுவதும் 116 மில்லியன் (11 கோடியே 60 லட்சம்) குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் மட்டும் 2.01 கோடி குழந்தைகள் பிறக்க உள்ளன. சீனாவில் 1.35 கோடி குழந்தைகள் பிறக்கும். நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

மேலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து வருவதால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு முறையான மருத்துவ உதவிகள் கிடைப்பதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல பலவீனமாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், அந்தக் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீட்ட மருத்துவர்களின் பெயரை, தன் குழந்தைக்கு சூட்டிய பிரிட்டன் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.