73ஆவது சுகந்திர தினம் நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தேசியவாதத்தை மக்களிடையே வளர்க்கும் விதத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஐவடேகர் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய அரசு செய்த சாதனைகள் பற்றிய தொகுப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பல பகுதிகளின் சிறப்பம்சங்கள் பற்றிய தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை தூர்தர்ஷன் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.