பிரதமர் நரேந்திர மோடி 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பால் நாட்டு மக்கள் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்கொண்டனர்.
வங்கிகளில் தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் மணிக்கணக்கில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பலர் தங்கள் உயிர்களை இழந்தனர்.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று(நவ. 8) பிரதமர் மோடி அதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து தனது ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில், "பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்னும் போலி ரூபாய் நோட்டுகள் உள்ளன, ஊழல்கள் அதிகரித்துள்ளது. கருப்பு பணம் குறித்து எந்த தரவுகளும் இன்னும் நம்மிடம் இல்லை. யாருக்கும் 15 லட்ச ரூபாய் கிடைக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பைடனையும் மோடியையும் ஒப்பிட்டு விமர்சித்த ப.சிதம்பரம்