ETV Bharat / bharat

புதுச்சேரி இடைத்தேர்தல் - காங்கிரஸ் vs என்ஆர் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதல்!

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி நேரடியாக மோதவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

ஜான்குமார்
author img

By

Published : Sep 28, 2019, 3:20 PM IST

புதுவையில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்-திமுக. கம்யுனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும். என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிடுகின்றனர்.

இதில் காங்கிரசும், என்ஆர் காங்கிரசும் நேரடியாக களம் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளரான ஜான்குமார் போட்டியிடுகிறார்.

ஆரம்பத்திலிருந்தே இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வந்த என்ஆர் காங் திடிரென களத்தில் குதித்தது. இதற்கு அதிமுகவும் ஆதரவு அளித்துள்ளது. இதனையடுத்து வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ நேருவை என்ஆர் காங்கிரஸ் களம் இறக்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகவுள்ளது.

இதனால் இடைத்தேர்தல் களத்தில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி மோதல் உறுதியாகியுள்ளது. இரு வேட்பாளர்களும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பார்க்க : நாம் தமிழர் கட்சி புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டி!

Intro:புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் காங். மற்றும் என்ஆர் காங் நேரடி மோத உள்ளது

Body:புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் காங். மற்றும் என்ஆர் காங் நேரடி மோத உள்ளது

செப். 28-

புதுவையில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்-திமுக. கம்யுனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும். என்ஆர் காங்கிரஸ். அதிமுக. பாஜக ஆகிய கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரசும் என்ஆர் காங்கிரசும் நேரடியாக களம் இறங்குகின்றன. காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்வதற்காக புதுவை காங்கிரசார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகில்வாசினிக். செயலாளர் சஞ்சய்த்த் ஆகியோரிடம் முதலமைச்சர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முதலமைச்சர் நாராயணசாமி தனது ஆதரவாளர் ஜான்குமாருக்கும், மாநிலதலைவர் நமசிவாயம் தனது ஆதரவாளரான ஜெயக்குமாருக்கும் சீட் கேட்டனர். தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்குவதில் இருவருமே உறுதியாக இருதனர். பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முதலமைச்சரின் ஆதரவாளரான ஜான்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்ட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.

இதற்கிடையே எதிரணியாளர் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து ஆரம்பத்தில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வந்த என்ஆர் காங் திடிரென களத்தில் குதித்தது. அதிமுக வும் என்ஆர் காங் ஆதரவு அளித்தது. இதனையடுத்து வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ நேரு வை என்ஆர் காங்கிரஸ் களம் இறக்குகிறது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகவுள்ளது. இதனிடையெ பாஜக தங்களிடம் ஆலோசிக்காமல் என்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிட போவதாக அறித்த்தால் நேற்று  தனித்து போட்டியிட விருப்ப மனு தேர்வினை நடத்தியது. இதனையடுத்து என்ஆர் காங்கிரஸ் பாஜக வை  சமரசப்படுத்தியது. தற்போது அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இடைத்தேர்தல் களத்தில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்  நேரடி மோதல் உறுதியாகியுள்ளது. இரு வேட்பாளர்களும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். அன்று காலை 10 மணியிலிருந்து 12  மணி வரை எமகண்டம் உள்ளது. எனவே பகல் 12 மணிக்கு மேல் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். அதே நேரத்தில் வேட்பாளர்கள் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நேரு புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் பூஜை செய்துவிட்டு தனது பிரச்சரத்தை தொடக்கியுள்ளனர். இந்த இரு வேட்பாளர்களும் முக்கிய பிரமுகர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.Conclusion:புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் காங். மற்றும் என்ஆர் காங் நேரடி மோத உள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.