ETV Bharat / bharat

பாடகி பி.சுசீலாவை கௌரவித்த புதுச்சேரி கம்பன் கழகம்! - p.suseela

புதுச்சேரி: கம்பன் கழகத்தின் 54ஆவது ஆண்டு விழாவில், பாடகி பி.சுசீலாவிற்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

p.suseela
author img

By

Published : May 12, 2019, 7:51 PM IST

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 54ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதில் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தனியுரை, கருத்தரங்கம், பட்டிமண்டபம், வழக்காடு மன்றம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இசைக்குயில் பின்னனி பாடகி டாக்டர் பி.சுசீலாவின் 50 ஆண்டுகால தமிழ் மொழி சேவையை பாராட்டி கம்பன் கழகம் சார்பில் பரிசுகள் வழங்கி கௌவுரவிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி, பீ.சுசிலாவிற்கு வழங்கி கௌவுரவித்தார்.

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 54ஆவது ஆண்டுவிழா

அப்போது நாராயணசாமி பேசுகையில், "புதுச்சேரியில் விரைவில் இசை தெரபி மையம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜா புதுச்சேரி அரசை அனுகியுள்ளார். இதற்கான நிலம் வழங்க புதுச்சேரி அரசு தயாராக உள்ளது" என்றார். நிகழ்வில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி ஷாஜகான் மற்றும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் பத்மபூஷன் டாக்டர் பீ.சுசிலாவிற்கு விருது வழங்கப்பட்டது.. இதனை முதல்வர் நாராயணசாமி வழங்கி கவுரவித்தார்......புதுச்சேரியில் 54ம் ஆண்டாக கம்பன் பெருவிழா புதுவை கம்பன் கழகம் சார்பில் கடந்த 10ந்தேதி தொடங்கியது. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த இந்நிகழ்வினை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். ஐதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமனியன் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தனியுரை, கருத்தரங்கம், பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் இசைக்குயில் பின்னனி பாடகி டாக்டர் பீ.சுசீலாவின்   50 ஆண்டுகளின் தமிழ் மொழியின் சேவையை பாராட்டி கம்பன் கழகம் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை முதல்வர் நாராயணசாமி, பீ.சுசிலாவிற்கு வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய முதல்வர், புதுச்சேரியில் விரைவில் மியூசிக் தெறிப்பி மையம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜா புதுச்சேரி அரசை அனுகியுள்ளார். இதற்கு நிலம் தர அரசு தயாராக உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.