ETV Bharat / bharat

செவிலியர் பணி செய்யும் ரோபோ: முதலமைச்சர் நாராயணசாமி இயக்கினார்!

author img

By

Published : May 8, 2020, 11:09 AM IST

புதுச்சேரி: செவிலியர் பணிக்காக உருவாக்கப்பட்ட ரோபோவை ரிமோட் கன்ட்ரோல் மூலம் முதலமைச்சர் நாராயணசாமி இயக்கினார்.

செவிலியர் பணி செய்யும் ரோபோ: முதலமைச்சர் நாராயணாசாமி இயக்கினார்!

புதுச்சேரி விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பேராசிரியர் சத்யா உள்ளிட்ட மாணவர்கள் செவிலியர் பணி செய்யும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோவின் வெல்லோட்டம் புதுவை சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் நடந்தது. அப்போது செவிலியருக்கு பதிலாக நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து, உணவு வழங்குவது, கிருமி நாசினி தெளிப்பது, நோயாளிகளை தொடாமல் உடலின் வெப்பநிலையை அளவெடுப்பது உள்ளிட்ட பணிகள் ரோபோ மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ரோபாவை முதலமைச்சர் நாராயணசாமி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கினார். புதுவை அரசுக்கு இந்த ரோபோ தேவைப்பட்டால் தயாரித்து வழங்குவதாகவும் இதனை அரசு அங்கீகரிக்க வேண்டுமென கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பரிசீலிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.