கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகத் துறையினர் உள்ளிட்டோரை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கைதட்டி பாராட்டினார்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களது நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர்களது வீடுகளிலிருந்து கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளரை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் கரோனா முன்னெச்சரிக்கை கருதி இன்று இரவு 9 மணி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.
புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல்படுத்தும் பொருட்டு நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அண்டை மாநில வாகனங்கள் அனைத்தும் புதுச்சேரிக்குள் வரவும், புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பேருந்துகளும் பொருந்தும் என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடியது தலைநகர் டெல்லி!