இந்தியா-அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று(அக்.27) நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறயுள்ள நிலையில், இந்த பேச்சுவார்ததை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று(அக்.26) டெல்லி வந்தடைந்தனர்.

பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வெளியுறவுத் அமைச்சர் ஜெய்சங்கர், மைக்கேல் பாம்பியோவை வரவேற்று உரையாடினார். இதுதொர்பாக ட்விட் செய்துள்ள அமெரிக்க வெளியுறவுத் அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, “டெல்லி வந்தத் தங்களுக்கு இந்தியா அளித்த வரவேற்பு, விருந்தோம்பல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நன்றி.

இந்நிகழ்வு இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான பிணைப்புக்கு ஒரு சான்றாக இருந்தது. அமெரிக்கா-இந்தியா 2 + 2 அமைச்சர்கள் பேச்சுவார்தையை எதிர்நோக்கிகொண்டு இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.