ETV Bharat / bharat

டெல்லியில் குறையும் காற்று மாசு! - டெல்லி காற்று மாசு

டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் இருந்து மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Pollution levels dip slightly in Delhi
Pollution levels dip slightly in Delhi
author img

By

Published : Oct 14, 2020, 10:30 PM IST

தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதே டெல்லியில் காற்றுமாசு ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்து, காற்றின் தரம் மேம்பட்டது. இருப்பினும், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வாகனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் வழக்கம்போல இயங்க தொடங்கிவிட்டன.

இதன் காரணமாக டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமானது. உட்சபட்சமாக நேற்று (அக் 13) டெல்லியில் காற்றின் தரம் 306 என்ற மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.

தொடர்ந்து, இன்று (அக் 14) டெல்லியில் காற்றின் தரம் 276ஆகியுள்ளது; அதாவது மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.

காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100 வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.

அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து சரியும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.