ETV Bharat / bharat

'காய்ச்சல், தொண்டை வலியால் அவதியுறும் கெஜ்ரிவால்'- விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து!

author img

By

Published : Jun 8, 2020, 10:58 PM IST

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சளி, காய்ச்சல், தொண்டை வலியால் அவதியுற்றுவருகிறார். இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு நாளை (ஜூன்-9) கரோனா பரிசோதனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Arvind Kejriwal coronavirus  Kejriwal COVID-19  Sanjay Singh  Pawan Khera  Political leaders wishes kejriwal  Kapil Mishra  அரவிந்த் கெஜ்ரிவால்  கெஜ்ரிவாலுக்கு கரோனா பாதிப்பு  டெல்லி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஞ்சய் சிங் ட்வீட்டில், “அரவிந்த் கெஜ்ரிவால் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். அவர் செவ்வாய் கிழமையன்று கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்” என கூறியிருந்தார்.

  • दिल्ली के मुख्यमंत्री भाई @ArvindKejriwal जी को कल 7 जून दोपहर से बुख़ार और गले में दर्द की शिकायत है उन्होंने डाक्टरों की सलाह पर खुद को घर में Isolation में रखा है कल 9 जून को उनका कोरोना टेस्ट होगा प्रभु से प्रार्थना है उन्हें जल्द स्वस्थ करें।

    — Sanjay Singh AAP (@SanjayAzadSln) June 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தச் செய்தியை அறிந்ததும் டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குமார் குப்தா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை போனில் தொடர்புகொண்டு அவரின் நலம் குறித்து விசாரித்தார்.

  • मुख्यमंत्री @ArvindKejriwal जी के अस्वस्थ होने की जानकारी मिलने पर अभी फोन कर उनकी कुशलक्षेम पूछी ।
    ईश्वर से प्रार्थना वह शीघ्र स्वस्थ हों।

    — Adesh Kumar Gupta (@adeshguptabjp) June 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ட்வீட் செய்துள்ள ஆதேஷ், “அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கேள்விப்பட்டதும், நான் அவரிடம் பேசினேன். அவருடைய உடல் நலன் குறித்து கேட்டறிந்தேன். அவர் விரைவாக குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் நலன் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “உங்களுக்கு (அரவிந்த் கெஜ்ரிவால்) கோவிட்-19 பரிசோதனை முடிவுகள், பாதிப்பில்லை என்று வரவேண்டும். இவ்வாறு நான் பிரார்த்திக்கிறேன். விரைவில் குணமடையுங்கள் கெஜ்ரிவால்” என ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நெருக்கமாக இருந்த குமார் விஸ்வாஸ், மாநிலங்களவை சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.வும் பாஜக உறுப்பினருமான கபில் மிஸ்ரா ஆகியோரும் கெஜ்ரிவால் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் உடல் நலம் குறித்து மக்களிடையே பகிர்ந்துகொண்ட ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சாதா, “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். தங்களின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றிகள்” என கூறினார்.

  • Dear @ArvindKejriwal - you are our inspiration and hero - a frontline warrior against coronavirus. You put yourself at risk for the well-being of people of Delhi. As you face a health challenge, our thoughts, wishes and prayers are with you. #TakeCareAK

    — Raghav Chadha (@raghav_chadha) June 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: கெஜ்ரிவாலுக்கு கரோனா? - நாளை பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.