நாட்டின் 17ஆவது மக்களைவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தற்போது நடந்து முடிவடைந்துள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டன.
குறிப்பாக சமூக வலைதளங்களிலும் அனைத்துக் கட்சிகளும் கவனம் செலுத்தின. சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்வதற்காக எந்தந்த கட்சிகள் எவ்வளவு செலவு செய்தன என்ற விவரத்தை பேஸ்புக் விளம்பரம் நூலக தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 1.21 லட்ச விளம்பரத்திற்கு அனைத்துக் கட்சிகளும் 53 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. இந்தச் செலவு விவரங்கள் பிப்ரவரி பாதியிலிருந்து மே 15ஆம் தேதி வரை கணக்கிடப்பட்டுள்ளது.
தனித்தனியாக பார்த்தால் பாஜக 17 ஆயிரம் கோடியும், காங்கிரஸ் இரண்டு கோடியே 71 லட்சமும், ஆம் ஆத்மி கட்சி இரண்டு கோடியே 18 லட்சமும், திருணாமுல் காங்கிரஸ் 29 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும் செலவு செய்துள்ளன.