கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். தடையை மீறி வெளியே வருவோரைக் காவல் துறையினர் கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாபில் பாட்டியாலா மாவட்டத்தில் காய்கறி சந்தைக்கு அருகில் இன்று காலை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த காரில் நிஹாங்ஸ் என்று அழைக்கப்படும் பாரம்பரிய ஆயுதங்களும், நீல நிறம் உடை அணிந்த சீக்கியர்கள் ஐந்து பேர் இருந்துள்ளனர்.
அவர்களிடம் காவலர்கள், ஊரடங்கில் சுற்றுவதற்கான அனுமதி கடிதத்தைக் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் திடீரென்று அங்குப் போடப்பட்டிருந்த காவல் துறையின் தடுப்புகளை (Barricade) இடித்துத் தள்ளினர்.
இதைத் தொடர்ந்து, காரிலிருந்து இறங்கிய நிஹாங்ஸ் பாதுகாப்புப் பணியிலிருந்த உதவி காவல் ஆய்வாளரின் கையை வெட்டியது மட்டுமின்றி, இருவரைப் பலமாகத் தாக்கிவிட்டுத் தப்பித்துள்ளனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, காவலர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, நிஹாங்ஸை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 1,472 குடியிருப்புகள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு- ஓபிஎஸ்