ETV Bharat / bharat

கர்ப்பிணிக்கு உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள்! - கரோனா

புதுச்சேரி: கர்ப்பிணிப் பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவலரை பொதுமக்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

கர்ப்பிணிக்கு உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

author img

By

Published : Apr 17, 2020, 5:49 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து, ரயில், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் புதுச்சேரியின் முத்தியால்பேட்டை எல்லைப்பகுதியில் நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக, அவரது தாயார் வாகனம் தேடியுள்ளார்.

அவருக்கு உதவ அக்கம் பக்கத்தினர் யாரும் வராததால், கர்ப்பிணியின் தாயார், அப்பகுதியில் பணியிலிருந்த காவலர் கருணாகரனின் உதவியை நாடியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட காவலர், ஆட்டோ உரிமையாளர் ஒருவரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார். வயது முதிர்வின் காரணமாக அவர் மறுக்கவே, காவலர் கருணாகரனே, கர்ப்பிணியை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை பத்திரமாகச் சேர்த்த பின்னர், மீண்டும் தனது பணிக்கு காவலர் சென்றுவிட்டார். மறுநாள் பணியிலிருந்த கருணாகரனை சந்தித்த கர்ப்பிணியின் தாயார், மகளுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி, இனிப்புகளை வழங்கினார். காவலரின் மனிதநேய மிக்க இச்செயல் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஜம்முவில் பாதுகாப்பு படையினர் பிரிவினைவாதிகளிடையே மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.