ETV Bharat / bharat

கைதிக்கு கரோனா உறுதி: காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் காவலர்கள்! - Mudhaliyarpet Police Station

புதுச்சேரி: கைது செய்யப்பட்ட இளைஞருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையத்தை கிருமி நாசினி தெளித்து காவலர்கள் தூய்மைப்படுத்தினர்.

Police to clean up police station in Puducherry

author img

By

Published : Jun 21, 2020, 6:17 PM IST

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதியில் மரப்பாலம் சிக்னல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனம் திருடிய ரமணா என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருடிய வாலிபரை கோவிட் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடைய சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பித்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த இளைஞருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.

இதனால், முதலியார்பேட்டை காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்ப்பட்டு காவலர்கள் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தி வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற அந்த இளைஞரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இ-பாஸ் இன்றி வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ. 85 ஆயிரம் வசூல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.