காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு அங்கு வன்முறை வெடிக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநாவில் உரை நிகழ்த்தினார். முதலில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளட்டும் என இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.
இந்த உரையைத் தொடர்ந்து காஷ்மீரின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் வீரமரணடைந்தார்.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.