ETV Bharat / bharat

குமாரசாமி வீட்டு திருமணத்தில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை! - காவல் துறை - குமாரசாமி வீட்டு திருமணம்

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலின் திருமணத்தில் விதிமீறல்கள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவ்வாறு எதுவும் நிகழவில்லை என காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி மகன் திருமணம்
குமாரசாமி மகன் திருமணம்
author img

By

Published : Apr 18, 2020, 12:17 PM IST

பெங்களூரு: முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலின் திருமணத்தில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நடிகர் நிகில், பெங்களூருவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணப்பாவின் சகோதரர் பேத்தி ரேவதி ஆகியோருக்கு ஏப்ரல் 17ஆம் தேதி ராமநகரில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்திருந்தார். முக்கிய பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்க இருந்தனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இச்சூழலில் கரோனா கிருமித் தொற்று வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. திருமண நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணம் நடத்த தடை இல்லை என்றும், ஆனால் அதில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி மகன் திருமணத்திற்கு ரவீணா எதிர்ப்பு

முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மனைவி சென்னம்மா உள்பட குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இதில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என 100 பேர் கலந்து கொண்டனர். 45 கார்களுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். திருமணம் நடந்த அந்த பண்ணை வீட்டின் அருகே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையே கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா, நிகில்-ரேவதி ஆகியோருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடியூரப்பாவின் ட்விட்டர் பதிவில், திருமண பந்தத்தில் இணைந்த நிகில்-ரேவதிக்கு வாழ்த்துக்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகன் திருமணத்தில் குமாரசாமி முகக் கவசம் அணியவில்லை என்றும், சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்றும், 400க்கும் மேற்பட்ட கார்களில் பலர் கலந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல் உதவி ஆய்வாளர் சி. பாஸ்கர், நிகிலின் திருமணத்தில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை என்று கூறிய அவர், அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கை ஏற்று, அனைத்தும் கட்டுப்பாட்டுடன் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.