புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மைக்கேல், சிவகுரு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ரவுடிகள் ஜோசப்ராஜ், ரோஸ் அய்யனார் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோசப் காவலர் சிவகுருவை சரமாரியாகத் தாக்கினார். ஒரு கட்டத்தில் இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
அப்போது தடுக்க வந்த மற்றொரு காவலரான மைக்கேலை, ஜோசப்பின் தம்பி பிடித்துக் கொண்டார். இதனால் அவருக்கும் அடி விழுந்தது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில் காவலர்களை ரவுடிகள் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.