ETV Bharat / bharat

'வாழ்வாதாரம் இழந்த யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது'

டெல்லி: கரோனா பரவலால் வாழ்வாதாரம் இழந்த யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 9, 2020, 7:49 AM IST

Updated : Jul 9, 2020, 10:03 AM IST

Amit Shah
Amit Shah

இது தொடர்பாக பேசிய அவர், "கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கோடிக்கணக்கான ஏழை, எளியோருக்கு 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது வரவேற்கத்தக்கது.

கரோனா தொற்று பரவலின் ஆரம்பக் கட்டத்தில் ஏழை பெண்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக 'உஜ்வாலா யோஜனா திட்டத்தின்' கீழ் மூன்று மாதங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், பல குடும்பங்கள் மூன்று சிலிண்டர்களை பெற முடியாததால், இந்த திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.4 கோடி பெண்கள் பயன்பெறுவர்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் நலனைக் கருத்தில் கொண்டு 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்' கீழ் மலிவு விலையில் வாடகை வீடு கட்டிக் கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது வரலாற்றுச் சிறப்பு. இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய முடியும்.

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது கிராமப்புறங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் பிரதமர் மோடியின் கனவு திட்டத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.

Last Updated : Jul 9, 2020, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.