கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மே மாதம் 3ஆம் தேதிவரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பாதிப்பை எதிர்கொள்ளும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இரு முறை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கரோனாவின் தற்போதை நிலை குறித்தும் மே 3ஆம் தேதிக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஹாட்ஸ்பாட்களாகக் கருதப்படும் கரோனா அதிகமுள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது, லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு ரூ.45 ஆயிரம் கோடி பாக்கி; வழங்குமா மத்திய அரசு?' - பேராசிரியர் ஜோதி சிவஞானம் பதில்