டெல்லி: பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி (PM SVANidhi scheme) திட்டத்தின்கீழ், சாலையோர வியாபாரிகளின் கடன் விண்ணப்பங்களை வழங்குவதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொபைல் செயலியை (PM SVANidhi scheme) மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று (ஆக.19) அறிமுகப்படுத்தினார்.
செவ்வாய்கிழமை மாலை மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் மற்றும் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்), ஆயுஷ்மான் பாரத், உஜ்ஜ்வாலா யோஜனா, ஜன் தன் யோஜனா மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா போன்ற திட்டங்களின் சமூக மற்றும் பொருளாதார விவரத்தினை விளக்குவது குறித்தும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின்கீழ், சாலையோர வியாபாரிகளின் கடன் விண்ணப்பங்களை வழங்குவதற்கான ஸ்வானிதி செயலியை அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்.
பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி (PM SVANidhi) திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகள் பத்தாயிரம் வரை கடன் பெறலாம். அதனை ஒரு வருட காலத்திற்குள் மாத தவணையாக திருப்பி செலுத்த வேண்டும்.
சென்ற ஜூலை 2ஆம் தேதி, PM SVANidhi போர்ட்டலில் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தொடங்கியதில் இருந்து, இதுவரை 5.68 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வங்கிக்கடன் தவணைகள் மேலும் நீட்டிக்க வாய்ப்பு: ரிசர்வ் வங்கி தகவல்