அமெரிக்காவுக்கு ஏழு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்புடன் பங்கேற்றார். அதன் பிறகு அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தலைநகர் டெல்லியில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் டெல்லி பாலம் விமான நிலையத்தில் திரண்டிருந்த பாஜகவினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், அதற்கு 130 கோடி இந்தியர்கள்தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியானது அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளிலும், காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். மேலும், மான் கி பாத் (மனதின் குரல்) என்ற தொடரில் கடந்த முறை பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி பிரதமர் வானொலியில் நிகழ்த்திய உரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் உரையாற்றவுள்ளார்.
இதையும் படிங்க:
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - ஐநாவில் தமிழில் கர்ஜித்த மோடி!