ETV Bharat / bharat

இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் தோனி - பிரதமர் மோடி புகழாரம்

author img

By

Published : Aug 20, 2020, 2:05 PM IST

Updated : Aug 20, 2020, 3:42 PM IST

dhoni
dhoni

13:58 August 20

வெற்றி, தோல்வி என அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதியாகவும் பொறுமையாகவும் விளங்கிய தோனி, இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு அறிவித்தார். இதையடுத்து தோனியின் ஓய்வுக்கு பல்வேறு துறை பிரபலங்களும் ட்விட்டர் வாயிலாக தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் தோனி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தோனிக்கு எழுதிய கடிதத்தில், "ஆகஸ்ட் 15ஆம் தேதி, எப்போதும் போல உங்களது தாழ்மையான பாணியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள்.

இதன் மூலம் ஒட்டு மொத்த நாடுமே உங்களை பற்றிய நீண்ட விவாதத்தில் இறங்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் ஆற்றிய சேவை காலம் கடந்து போற்றத்தக்கது. உங்களின் முடிவை கண்டு 130 கோடி இந்தியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

மிகச் சிறந்த கேப்டனாக விளங்கிய நீங்கள், உலக தரவரிசையில் இந்தியாவை உச்சிக்கு அழைத்து சென்றீர்கள். மிகச் சிறந்த பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் என வரலாற்றில் உங்கள் பெயர் பதிவிடப்படும்.

2011ஆம் ஆண்டு, உலக கோப்பை இறுதி போட்டியில் நீங்கள் சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்ததை என்றென்றும் நினைவுகூரலாம்.

உங்களை கிரிக்கெட்டராக மட்டும் நினைவுகூர்வது அநீதியானது. நீங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் இன்றைய இளைஞர்கள் பதற்றமின்றி செயல்படுகிறார்கள். இதனை, நீங்கள் விளையாடிய போட்டிகளில் நான் கண்டுள்ளேன். நீங்கள் தலைமை தாங்கிய அணி அஞ்சாமல் செயல்பட்டது போல், இன்றைய இளைஞர்கள் செயல்பட்டுவருகின்றனர்.  

ஹேர் ஸ்டைலில் மாற்றம் தென்பட்டாலும் வெற்றி, தோல்வி என அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதியாகவும் பொறுமையாகவும் விளங்கிய நீங்கள் , இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம். இந்திய ராணுவத்துடனான உங்களின் தொடர்பை இங்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

நீங்கள் பொதுநலன் மீது வைத்துள்ள ஆர்வம் மகத்தானது. உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘தோனியைப் போன்று மற்றொருவர் கிடையாது’- மிதாலி ராஜ்!

Last Updated : Aug 20, 2020, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.