பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிவிட்ட ட்வீட்டில், "இன்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இம்முறை இரு அவைகளிலும், குடிமக்களை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் இந்தியாவின் மேம்பட்ட வளர்ச்சியை உருவாக்குவது குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்துவோம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இலங்கை மக்களுக்கும் வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.