ETV Bharat / bharat

உலக மக்களிடையே உரையாற்ற உள்ள பிரதமர்: முதலீட்டாளர்களை கவருவாரா மோடி! - குளோபல் வீக் 2020

லண்டன்: உலகளாவிய வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

உலக மக்களிடையே உரையாற்ற உள்ள பிரதமர்: முதலீட்டாளர்களை கவர்வார மோடி!

author img

By

Published : Jul 7, 2020, 11:24 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை(ஜூலை.9) முதல் இங்கிலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியா குளோபல் வீக் 2020இல் இந்தியாவின் வர்த்தக, வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை மையமாகக் கொண்ட உலகளாவிய முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதன் மூலம் உலகளவில் உள்ள ஏராளமான முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்தியா இன்க் ஊடக குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் லாட்வா கூறுகையில், கரோனாவிலிருந்து மீண்டுவர உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பிரதமரின் உரை இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் ஊரடங்கு உள்ளதால் காணொnf வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார். ஜூலை 9 முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திறன் மேம்பாட்டு அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே உள்ளிட்டோரும் இந்தியாவின் முக்கிய உரையாளர்களாவர்.

இதில் இங்கிலாந்து தரப்பில், இளவரசர் சார்லஸ் உரையாற்றவுள்ளார். அதுமட்டுமின்றி, வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், உள்துறை செயலாளர் பிரிதி படேல், சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், சர்வதேச வர்த்தக செயலாளர் உள்ளிட்டோரும் பேசவுள்ளனர்.

இங்கிலாந்து பிரெக்ஸிட் வெளியேற்றத்திற்கு பின் இந்த மாநாடு நடைபெறுவதால், கவனிக்கதக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி இதன் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்.

ஜூலை 9 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தியா குளோபல் வீக் 2020 இல் சுமார் 75 அமர்வுகள் இருக்கும். இதில் புவிசார் அரசியல், வணிகம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நிதி, மருத்துவம், பாதுகாப்பு, கலை மற்றும் கலாச்சாரம் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதில் 250க்கும் மேற்பட்ட பல்துறை நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன் மூலம் இந்த மாநாடு முதலீட்டாளர்கள் உட்பட பல தரப்பட்ட மக்களை சென்றடையும் என்பதில் ஐயமில்லை.

இந்த மாநாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் குணால் நய்யர், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஊடகவியளாளர் பர்கா தத், ஆர்ட் ஆஃப் லிவிங் அறக்கட்டளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் உரைகளும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க....எல்லைப் பகுதியில் ராணுவத்தைத் திரும்பப் பெற்ற சீனா...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.