ETV Bharat / bharat

கையை ஆட்டுவதை நிறுத்தி மௌனத்தைக் கலையுங்கள் - மோடி குறித்து ராகுல் விமர்சனம்

author img

By

Published : Oct 7, 2020, 12:42 PM IST

டெல்லி: பேரணியில் மக்களை நோக்கி கையைக் ஆட்டுவதை நிறுத்திவிட்டு அவர்களின் கேள்விக்கு பதில் அளியுங்கள் என பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல்
ராகுல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பஞ்சாப் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ராகுல் காந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கிடையே, இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையான அட்டல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதுகுறித்து ராகுல் காந்தி விமர்சிக்கையில், கையை ஆட்டுவதை நிறுத்திவிட்டு மௌனத்தைக் கலையுங்கள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களை நோக்கி கையை ஆட்டுவதை நிறுத்திவிட்டு, உங்களது மௌனத்தைக் கலையுங்கள். கேள்வியைக் எதிர்கொள்ளுங்கள். மக்கள் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில், நேற்று, தான் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பின் ஒரு பாகத்தை ராகுல் இணைத்துள்ளார். அதில், கரோனா பெருந்தொற்று, வேளாண் சட்டங்கள், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை போன்ற பல விவகாரங்கள் குறித்து ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் 1200 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீன ஆக்கிரமித்துள்ளது. இதனை அவர்கள் எப்படி செய்திருக்க முடியும்.தனது இருப்பை உறுதிப்படுத்த இந்திய நிலப்பகுதியை சீனாவுக்கு தர பிரதமர் மோடி தயாராக உள்ளார். இதனை தெரிந்துகொண்டே சீனா ஆக்கிரமித்துள்ளது" என ராகுல் விமர்சனம் செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.