ETV Bharat / bharat

கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பாரா? - ராம்லீலா மைதானம் டெல்லி

டெல்லி: மூன்றாவது முறையாக முதலமைச்சராக கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் மோடி பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

aap
aap
author img

By

Published : Feb 14, 2020, 6:38 PM IST

டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெறும் நிலையில் விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம் என பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. வரும் ஞாயிறு அன்று பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சியும் 8 தொகுதிகளை பாஜகவும் வென்றுள்ளன. பிரமாண்ட வெற்றிபெற்ற ஆம் ஆத்மி அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு மேடை, எங்களுக்கு?'- மாற்றுத்திறனாளிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.