ETV Bharat / bharat

தேசிய தூய்மை மையத்தைத் தொடங்கி வைத்த மோடி - PM Modi inaugurates Rashtriya Swachhata Kendra at Raj Ghat

டெல்லி : தூய்மை பாரதத் திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், ராஜ் காட்டில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தேசிய தூய்மை மையம்
தேசிய தூய்மை மையம்
author img

By

Published : Aug 8, 2020, 6:18 PM IST

Updated : Aug 8, 2020, 6:31 PM IST

தூய்மை இந்தியா திட்டத்தின் அனுபவங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தேசிய தூய்மை மையம் அமைக்கப்படும் என, பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அறிவித்திருந்தார். காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேசிய தூய்மை மையம் திறக்கப்படும் எனவும் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி இன்று (ஆக.8) திறந்து வைத்தார். பின்னர் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாம் அனைவரும் பரப்புரையில் அங்கம் வகிக்கிறோம். கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக குழந்தைகள் உள்பட இங்குள்ள அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைபிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கரோனாவால் விவசாயத்திற்குப் பாதிப்பில்லை; கிராமப் பொருளாதாரம் நிலையாக உள்ளது'

Last Updated : Aug 8, 2020, 6:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.