ETV Bharat / bharat

'இளைஞர்கள் புகையிலைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்' - பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: இளைஞர்கள் புகையிலை, இ - சிகரெட் ஆகியவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.

modi
author img

By

Published : Sep 29, 2019, 2:01 PM IST

பிரமதர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மாதம்தோறும் ஒருமுறை வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று பேசிய அவர், "இ - சிகரெட் மனித இனத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அதன் பயன்பாட்டிற்கு என் அரசு தடை விதித்துள்ளது. இ - சிகரெட் தீங்கு விளைவிக்காது என பல இளைஞர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

புகையிலைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிலிருந்து வெளிவர சிரமப்படுகிறார்கள். அதனை பயன்படுத்துவதால்தான் புற்றுநோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகிறது. உடலில் நச்சு ஏற்படுத்தும் நிகோட்டின் புகையிலையில் இருப்பதால்தான் இளைஞர்கள் அதில் அடிமையாகின்றனர். இது, மனஅளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் இ - சிகரெட் பிரபலமாகியுள்ளது. எனவே, இளைஞர்கள் புகையிலை, இ - சிகரெட் ஆகியவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நவராத்திரி வாழ்த்து!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.