கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதில், கலந்துகொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். ஊரடங்கை முன்னதாகவே அறிவித்ததால் பல வளர்ந்த நாடுகளின் நிலைமையை விட இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது.
-
PM has taken correct decision to extend lockdown. Today, India’s position is better than many developed countries because we started lockdown early. If it is stopped now, all gains would be lost. To consolidate, it is imp to extend it
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM has taken correct decision to extend lockdown. Today, India’s position is better than many developed countries because we started lockdown early. If it is stopped now, all gains would be lost. To consolidate, it is imp to extend it
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 11, 2020PM has taken correct decision to extend lockdown. Today, India’s position is better than many developed countries because we started lockdown early. If it is stopped now, all gains would be lost. To consolidate, it is imp to extend it
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 11, 2020
இப்போது இது தளர்த்தப்பட்டால், நாம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் வீணாகிவிடும். எனவே, ஊரடங்கை நீட்டிப்பது சரியான முடிவு" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கை நீட்டிக்க கெஜ்ரிவால் கோரிக்கை