ETV Bharat / bharat

கோவிட் - 19: மியான்மருக்கு உதவும் இந்தியா - மியான்மருக்கு உதவும் இந்தியா

டெல்லி: கரோனா வைரஸ் நோயில் சிக்கியிருக்கும் மியான்மருக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்துதரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Modi
Modi
author img

By

Published : May 1, 2020, 1:14 PM IST

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் தெற்காசிய நாடுகள் தவித்துவருகின்றன. மியான்மர் நாட்டில் இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகப்படியான மருத்தவ பரிசோதனை மேற்கொள்ளாத காரணத்தால்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார, மருத்துவ நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அனைத்து விதமான உதவிகளும் மியான்மருக்கு செய்துதரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சாங் சூகியிடம் மோடி இன்று கேட்டறிந்தார்.

மேலும், சிறப்பாக இருக்கும் இருநாட்டு உறவை மேம்படுத்தவும் சவால்களை எதிர்கொள்ளவும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளோம் என மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பிராந்திய, உள்நாட்டு பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாதக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை நீக்குக'- காங்கிரஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.