இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளாத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. இந்தியாவின் ஒரு அங்குலத்தைக்கூடத் சீனா கைப்பற்றவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்க பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் யாரும் அவ்வுளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. எந்த ஒரு கடினமாக சூழலையும் நமது ராணுவத்தால் திறம்பட கையாள முடியும். நிலைமையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.