மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் துறைமுகம், ஹவுரா பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி நேற்று விழா கொண்டாடப்பட்டது.
கொல்கத்தா மில்லினியம் பூங்காவில் நடத்தப்பட்ட இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஒலி-ஒளி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
பல வண்ணங்களில் எல்.இ.டி. விளக்குகளால் ஹவுரா பாலம் மிளிர, காண்போரை மெய்சிலிர்க்கவைத்தது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தன்கர், மத்திய கப்பல் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையடுத்து, படகு மூலம் ராமகிருஷ்ணா மடத்தின் சர்வதேச தலைமையகமான பெல்லூர் மடத்துக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க : ஜே.என்.யு. பிரச்னையும் அதன் தாக்கமும்