நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 7 மணியளவில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அவர் செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்று மூவர்ணக் கொடியை ஏற்றினார். தற்போது, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார்.