உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள அரசு விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தியதில் அவர்களில் 57 பேருக்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பான செய்திகள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து வழக்குரைஞர் அபர்ணா பட் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு விடுதில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 57 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர்? இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனடி மருத்துவ நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க: மம்தா பானர்ஜியிடம் வெள்ளை அறிக்கை கோரும் பாஜக!