ETV Bharat / bharat

டெல்லிவாசிகளுக்கு மட்டுமே கரோனா சிகிச்சை: மாநில அரசின் அறிவிப்புக்கு எதிராக மனு

author img

By

Published : Jun 9, 2020, 2:06 PM IST

டெல்லியிலுள்ள மருத்துவமனைகளில் டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படும் என்ற அம்மாநில அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Apex court
Apex court

தேசிய தலைநகர் பகுதியில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், அங்கு கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, டெல்லியிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பிற்கு எதிராகப் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சர்தக் சதுர்வேதி என்ற வழக்குரைஞர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில், "டெல்லியிலுள்ள மருத்துவமனைகளில் டெல்லிவாசிகள் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் சட்டப்பிரிவு 14 , 19, 21 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது.

டெல்லி அரசின் அறிவிப்பு குடிமக்களிடையே பாகுபாடுகளைக் காட்டும் வகையில் உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் அறிவிப்பை ரத்துசெய்து, தேவைப்படும் அனைவருக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சர்தக் சதுர்வேதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லிவாசி என்பவர் யார்? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ப. சிதம்பரம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.