பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு சந்தைக்கு ஏற்ப நாள்தோறும் மாற்றியமைத்து வந்த எண்ணெய் நிறுவனங்கள், மார்ச் 14ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூன்று ரூபாய் உயர்த்தப்பட்ட பிறகு, விலை ஏற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.
இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் முறை அமலுக்கு வந்தன. அதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி 6ஆவது நாளான இன்றும் (ஜூன் 12) விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் பெட்ரோல் 57 பைசா உயர்த்தி லிட்டர் ரூ.74.57 ஆகவும், டீசல் 59 பைசா உயர்த்தி லிட்டர் ரூ.72.81 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
![சர்ரென்று ஏறிய பெட்ரோல்- டீசல் விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11:18_kkkkkkkkkkkkkkkkkkkk_1006newsroom_1591776204_473.webp)
அதேபோல், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 78.47 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 71.14 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோலில் கடந்த 6 நாள்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.31 பைசாவும், டீசலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.42 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை உடனடியாகக் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 100% நேரடி அந்நிய முதலீடு : நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடும் மத்திய அரசு!