உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசு, அம்மாநில பொருளாதார தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மதிப்புக் கூட்டு வரியை தற்போது அம்மாநில அரசு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் ரூபாய் 73.65க்கும், டீசல் ரூபாய் 65.34க்கும் விற்கப்படுகிறது. மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டதால் ஆண்டுக்கு உத்தரப் பிரதேச அரசு 3,000 கோடி ரூபாய் சேமிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.