டெல்லியில் சிஏஏ., என்பிஆர்., என்ஆர்சி., எதிரான கூட்டணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
“ ஒவ்வொரு குடும்பம், தனிநபர்களின் புள்ளிவிவரங்கள், பிற விவரங்களை சேகரிக்கும் பணியாளர்களைக் ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக, என்பிஆர் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை.
தேசிய மக்கள் தொகைப் பதிவைப் புதுப்பிக்கும் பயிற்சியின் போது எந்தவொரு குடிமகனும் ‘டி’ அல்லது ‘சந்தேகத்திற்குரியவர்’ என்று குறிக்கப்படமாட்டார் வாக்குறுதி அளித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதனை நாங்கள் இப்போது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என கோருகிறோம்.
என்.பி.ஆருக்கு சட்டரீதியான அடிப்படை இல்லை. இது என்ஆர்சிக்கு வசதியாக 2003 திருத்த விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. என்பிஆருக்கு, என்ஆர்சி அடிப்படை என்றால் குடியுரிமை திருத்தச் சட்டம் 2003 விதிகளையே திருத்த வேண்டும்.
அதாவது, விதி 3 (5), 4 (3), 4 (4) ஆகியவை குடிமக்களை ‘சந்தேகத்திற்குரியவர்கள்’ என அடையாளப்படுத்தவும், அவர்களை குடிமக்களின் தேசிய பதிவிலிருந்து நீக்க என்பிஆரை பயன்படுத்த அனுமதிக்கிறது. என்பிஆருக்கு தகவல்களை வழங்குவது தன்னார்வமானது என்பதையும், தகவல்களை வழங்கத் தவறியதற்காக யாருக்கும் அபராதம் விதிக்கப்படாது என்பதையும் உறுதிசெய்ய அரசாங்கம் விதி 7 (2) மற்றும் 17 ஆகிய விதிகளை திருத்தலாம்.
இதன் மூலமாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாம். நாங்கள் கோரிய இந்த திருத்தங்களை அரசாங்கம் நிறைவேற்றினால், தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எதிரான போராட்டங்களை திரும்பப் பெற நாங்கள் தயாராக இருப்போம்” என்றார்.
ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான ஹர்ஷ் மந்தர் கூறுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து என்பிஆரை நீக்குவதன் மூலமாக மட்டுமே மாநிலங்களவையில் அமித் ஷாவின் அளித்த உறுதிமொழியை ஏற்க முடியும். சிஏஏவுக்கு பிறகு நாட்டில் பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்றால் தாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவோம் என அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அச்சத்தை வெறும் வாய்மொழியால் போக்க முடியாது. அது சட்டமானால் தான் மக்கள் நம்புவர்” என்றார்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் இருவருக்கு கொரானா பாதிப்பு!