இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'எல்லையில் இரு தரப்பு ராணுவமும் பூசலை தீர்த்து அமைதியான சூழலுக்கு திரும்பத் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முன்னகர்வை நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதேவேளை, கடந்த மே 5ஆம் தேதிக்கு முன்னர் எல்லையில் நிலவரம் எவ்வாறு இருந்ததோ அது தொடர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்' என்றார்.
முன்னதாக, மே மாதம் 5ஆம் தேதிக்குப்பின் லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களைக் குவித்து அத்துமீறலில் ஈடுபட்டது. இதையடுத்து இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதன் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இரு நாட்டு ராணுவத் தலைமையும் தொடர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தின.
அதன்பின்னர், இரு தரப்பும் சுமுக நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறி ராணுவத்தை பின்வாங்கத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: மீண்டும் திரும்பும் வரலாறு - டாடா கைக்கு திரும்பச் செல்லும் மகாராஜா!