ETV Bharat / bharat

‘பொதுமக்கள் கரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்’- முதலமைச்சர் நாராயணசாமி!

author img

By

Published : May 15, 2020, 8:15 PM IST

புதுச்சேரி: கரோனா இயற்கையாக உருவான தொற்றில்லை மனிதனால் உருவாக்கப்பட்ட தொற்று. இதனை கட்டுப்படுத்த முடியாது, மக்கள் தான் கரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி
முதலமைச்சர் நாராயணசாமி

இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “கரோனா தொற்று உலகம் முழுவதும் இன்னும் சில காலம் இருக்கும். இந்த நோயால் முதியவர்கள் தான் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி பொதுமக்கள் கரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும்.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொற்றாக உள்ளது. இது இயற்கையாக உருவாகியிருந்தால் கட்டுப்படுத்த முடியும். இந்த நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்க அதற்கு தங்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மக்கள் தங்களுடைய வாழ்நாளை நகர்த்த முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருந்தார். மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். இதை தவிர நிதி ஆதாரங்களை தருவதாக அறிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தது புதிய திட்டம் இல்லை. மாநில அரசுக்கு நிதி சுமை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பிரதமர் உள் துறை அமைச்சர் நிதி அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். அண்டை மாநிலங்களில் முன்கண்ட பணியாளர்களை தவிர்த்து மற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று புதுச்சேரியில் செய்வது குறித்து அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். நான் மத்திய அமைச்சராக இருந்து பெற்றுவரும் ஓய்வூதியத்திலலிருந்து 30 சதவீதத்தை மாநில அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளேன். இதேபோல் பலரும் முன்வந்தால் மாநில அரசுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: ‘அடுத்த ஒரு வருடத்திற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்’ - முதலமைச்சர் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.