மேற்கு வங்கத்தில் மதியம்கிராம் பகுதியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, "தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (என்.ஆர்.சி) எதிராக முதல் முதலில் நாங்கள்தான் குரல் எழுப்பினோம். மேலும் தேசிய குடிமக்கள் தொகை பதிவேட்டிற்கும் (என்.பி.ஆர்) கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகிறோம்.
என்.பி.ஆர் கணக்கெடுப்பிற்காக ஆறு முக்கிய தகவல்கள் பெறப்படுகின்றன. அதனால் யாராவது மக்களாகிய உங்களிடம் வந்து அது தொடர்பான தகவல் சேகரிக்க முயன்றால் அவர்களிடம் உங்கள் சுய விவரங்களை தர வேண்டாம்.
என்.ஆர்.சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் நடக்கும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது. அதனை நான் ஆதரிக்கவில்லை. இது போன்று போராட்டங்களில் அரசியல் கட்சியின் தலைவர்கள் கூடுதல் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை தொழிற்சங்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்தின்போது மேற்கு வங்கத்தில் வன்முறைகள் நடைபெற்றது குறிப்படித்தக்கது.
இதையும் படியுங்க: மம்தா பானர்ஜி கீழ்தரமான அரசியல் செய்கிறார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்